dinamalar telegram
Advertisement

அரசு பஸ் சிறைபிடிப்பு

Share
ஊத்துக்கோட்டை: குறைந்தளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாநகர பஸ்சை சிறைபிடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி பஸ் டிப்போவில் இருந்து, தடம் எண், 77 என்ற பஸ், கோயம்பேடில் இருந்து, ஆவடி, அம்பத்துார், திருநின்றவூர், பாக்கம், கோயம்பாக்கம் வழியே, வதட்டூர் கிராமத்திற்கு இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.இப்பகுதியில் இருந்து பொதுமக்கள், தங்களது அத்தியாவசியத் தேவைக்கும், மாணவர்கள் மேற்படிப்பிற்கும் இங்கு இயக்கப்பட்ட இரண்டு பஸ்கள் மூலம் சென்று வந்தனர்.இந்நிலையில், 10 நாட்களாக, ஒரு பஸ் குறைக்கப்பட்டு, ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை, வதட்டூர் கிராமத்திற்கு வந்த மாநகர பஸ்சை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநகர பஸ் டிப்போ மண்டல மேலாளர் அண்ணாதுரை, வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.இதில், போக்குவரத்து அதிகாரிகள், ஏற்கனவே இயக்கப்பட்ட இரண்டு பஸ்கள், இந்த பகுதிக்கு இயக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதனால், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement