Advertisement

டவுட் தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஈ.வெ.ரா., மற்றும் எங்கள் கொள்கைகள் மீது, சங் பரிவார் சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை, வன்மையாக கண்டிக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஈ.வெ.ரா., போராடினார்; பெண் உரிமைக்காக குரல் கொடுத்தார்: ஜாதி முறைகளுக்கு எதிராக பேசினார்.


'டவுட்' தனபாலு: அப்படியே, 'உல்டா'வாக பேசுகிறீர்களே... ஈ.வெ.ரா., அதை எதிர்த்து போராடினார்; இதை எதிர்த்து போராடினார் என்கிறீர்களே, அவரது போராட்டத்தால், தமிழகத்திலிருந்து ஜாதி மறைந்து விட்டதா; பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைத்து விட்டதா... சும்மா, ஏதாவது போட வேண்டும் என்பதற்காக, 'டுவிட்டரில்' இந்த கருத்தை பதிவு செய்தீர்களோ என்பதே என், 'டவுட்!'


தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: நடிகர் ரஜினியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. அவரின், பாட்ஷா படம் வெளியான போது, கட்சியை அவர் துவக்கியிருந்தால், ஆட்சியைப் பிடித்திருப்பார். அரசியல் கட்சி துவக்க, ரொம்ப தாமதம் செய்து விட்டார். இனிமேல் அவரால் வெற்றி பெற முடியாது.


'டவுட்' தனபாலு: ஒரு படம் நன்றாக இருந்தாலோ அல்லது அதன் நாயகர் நன்றாக நடித்து, படம் நன்றாக ஓடினாலோ, தமிழகத்தின் முதல்வர் பதவியை பிடித்திருக்கலாம் என்பது சரியில்லை. இப்போது கூட, வடிவேலு, கஞ்சா கருப்பு போன்ற சில நடிகர்களின் படங்கள், பரபரப்பாக பேசப்படுகின்றன; நன்றாக ஓடுகின்றன. அதற்காக, அவர்களை முதல்வர் பதவியில் அமர்த்தி, மக்கள் அழகு பார்ப்பரா... என், 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!


துணை முதல்வர் பன்னீர்செல்வம்: அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு, 10 நாட்கள் சென்றிருந்தேன். தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுத்தேன். தமிழகத்தில் தொழில் துவங்க, அமெரிக்கர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்னும் ஒரு மாதத்திற்குள் அவர்கள், தமிழகத்தில் தொழில் துவங்குவர்.


'டவுட்' தனபாலு: அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து பேசி, தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்துள்ளீர்கள் என்பது சரி தான். நல்லவேளையாக, இத்தனை தொழிற்சாலைகள் வரவுள்ளன; இவ்வளவு முதலீடு வரவுள்ளது என, இதற்கு முன் சுற்றுப்பயணம் சென்று வந்த, முதல்வர் இ.பி.எஸ்., போல நீங்கள் கூறவில்லை. இதைப் பார்க்கும் போது, அவரை விட நீங்கள், முன்யோசனைக்காரர் என்பது, 'டவுட்'டே இல்லாமல் தெரிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • JOY - Chennai,இந்தியா

    , periyar poradina appuraamai ivalavu jaathi prachanai na avar illama irrunthiruntha ?

  • AYYA - Chennai,இந்தியா

    சொரியர் மண்ணை கொஞ்சம் கசமுசா சுடலை வாயில கொஞ்சம் போட வேண்டியதுதான்.

  • Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா

    Doubt dhanapalu. Aanalum unakku kusumbu jaasthi. Vadivelu ganja karuppu ellam innum cinema thoraila irukkaangala ? Ops ku yeadhu avalo munyosanai ellam. Ellam EPS kodutha tips thaan kaaranam. Naan(EPS) pesuna pechukku ennai varuthaanga neenga andha maadhiri pesaama konjam soodhanama nadandhukonga nu sollirukaalaam.

Advertisement