கடலுார் : கடலுாரில் ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம் திறப்பு விழாவையொட்டி, மஞ்சக்குப்பம் மைதானத்தில், தொடர்ந்து பெய்யும் கன மழையிலும், பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுாரில் ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் தற்போது திறப்பு விழாவுக்கு முதல்வர் தேதி கொடுத்துள்ளார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். விழாவில், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
பந்தல் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 80 ஆயிரம் சதுர அடியில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தலின் தென்புறத்தில் மேற்கு நோக்கி, 2400 சதுர அடி பரப்பளவில் 'குளுகுளு' வசதியுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. பந்தலில் 6, 500 நாற்காலிகள் போடப்பட உள்ளன.
கடலுாரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மைதானம் முழுவதும் சகதியாக உள்ளது. பம்ப்செட் மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். சகதியை மாற்றுவதற்காக பொதுப்பணித்துறையினர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். பந்தல் அமைக்கும் பகுதியில் மணல் பரப்பபடுகிறது. இதற்காக லாரிகள் கூட பந்தலுக்குள் வர முடியாத நிலை உள்ளது. இதனால் பந்தல் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் ஓட்டல் முதல் மைதானம் வரை நேற்று புதிய சாலை போடப்பட்டுள்ளது. பந்தல் அமைக்கும் பணியை, அமைச்சர் சம்பத், கலெக்டர் அன்புச்செல்வன், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஆகியோர் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
கடலுாரில் ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் தற்போது திறப்பு விழாவுக்கு முதல்வர் தேதி கொடுத்துள்ளார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். விழாவில், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
கடலுாரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மைதானம் முழுவதும் சகதியாக உள்ளது. பம்ப்செட் மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். சகதியை மாற்றுவதற்காக பொதுப்பணித்துறையினர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். பந்தல் அமைக்கும் பகுதியில் மணல் பரப்பபடுகிறது. இதற்காக லாரிகள் கூட பந்தலுக்குள் வர முடியாத நிலை உள்ளது. இதனால் பந்தல் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் ஓட்டல் முதல் மைதானம் வரை நேற்று புதிய சாலை போடப்பட்டுள்ளது. பந்தல் அமைக்கும் பணியை, அமைச்சர் சம்பத், கலெக்டர் அன்புச்செல்வன், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஆகியோர் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
முதல்வர் வருகை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பகல் 12.15 மணிக்கு கடலுார் வருகை தருகிறார். மணி மண்டபத்தை திறந்து வைத்த பின்னர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து சுப்ராயலு ரெட்டியார் மண்டபத்தில் அ.தி.மு.க., சார்பில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மதியம் புதுச்சேரியில் மதிய உணவை முடித்துக்கொண்டு சென்னை செல்கிறார்.
நம் தமிழ்நாட்டை இந்த அதிமுக அரசு அழிகிறது. அதிமுக கட்சியில் இருப்பவர்கள் கோடியில் புரளுகிறார்கள்.