Advertisement

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எடைக்கல் சப் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஷேக்உசேன்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.அதன்பேரில் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த நடியபட்டு பகுதியைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் விஜய், 21; என்பவரை கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement