Advertisement

பெண் போலீஸ் உடல் திறன் தேர்வு

விழுப்புரம் : இரண்டாம் நிலை போலீசாருக்கான உடல் திறன் தேர்வில் திருநங்கை உட்பட 550 பேர் தகுதி பெற்றனர்.

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில், இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு பெண்களுக்கான உடல் திறன் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட 984 பெண்களில், 964 பேர் பங்கேற்றனர்.நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டம் ஆகியவை நடந்தது. இதில், சங்கராபுரம் தாலுகா லா.கூடலுாரைச் சேர்ந்த திருநங்கை கணேசன் மகன் மஞ்சு, 24; உட்பட 550 பெண்கள் தகுதி பெற்றனர்.தேர்வு பணியை தலைமையிடத்து ஐ.ஜி., செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டார். டி.ஐ.ஜி., சந்தோஷ்குமார், எஸ்.பி.,க்கள் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன் உடனிருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement