Advertisement

ஏரி வாய்க்காலில் ஆண் உடல்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஏரி கால்வாயில் ஒருவர் இறந்த நிலையில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் கிளை கால்வாயில் நேற்று முன்தினம் ஒரு ஆண் உடல் மிதந்தது. தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் விரைந்து சென்று இறந்தவர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அதில், இறந்தவர் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராயபிள்ளை மகன் அம்சவேல், 30; என தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து அம்சவேல் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement