Advertisement

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

திருக்கோவிலுார் : உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருக்கோவிலுார் வட்டார வள மையத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் முரளிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் போட்டியை துவக்கி வைத்தார்.திருக்கோவிலுார் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 14 வயதுடைய மாற்றுத்திறனுடைய மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். பந்து எறிதல், ஓட்டப்பந்தயம், பலுான் ஊதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பரிசு வழங்கி பாராட்டினார்.ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் மணிகண்டன், ஏழுமலை, ராஜ்குமார், சிறப்பு பயிற்றுனர்கள் ஜெயசீலன், சுமதி, பத்மநாபன் செய்திருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement