Advertisement

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ரஜினி திட்டவட்டம்! கமலின் கட்சியும் போட்டியில்லை

சென்னை: 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை' என ரஜினி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தன் புகைப்படம் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியை பயன் படுத்தவும் தடை விதித்துள்ளார். அதே நேரத்தில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கியுள்ளது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கு இன்று மனுத்தாக்கல் துவங்குகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இந்த தேர்தலுக்கான 'சீட்' பங்கீடு குறித்து அ.தி.மு.க. - தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றன.

சமீபத்தில் 'திரைத்துறையில் கமலின் 60 ஆண்டுகள்' தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினி 'தமிழகத்தில் நேற்று நடந்த அற்புதமும் அதிசயமும் நாளையும் நடக்கும். அவற்றை பொதுமக்கள் நிகழ்த்தி காட்டுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரது ரஜினி மக்கள் மன்றம் உள்ளாட்சி தேர்தல் களத்தில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உருவானது. அரசியல் கட்சிகளும் அவரின் ஆதரவை பெறலாமா அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா என்ற ஆலோசனையில் இருந்தன.

இந்நிலையில் 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை' என நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் மாநில நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்; ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயர்; மன்றத்தின் கொடி; தலைவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கக் கூடாது. மீறி செயல் பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு ஏன் என்பது குறித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: நடிகர் ரஜினி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் விரைவில் அரசியல் கட்சி துவக்க உள்ளார். சட்டசபை தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிலை படுத்தப்படுவார். அப்போது அவரது கட்சியை மையமாக வைத்து தேர்தல் நடக்கும் நிலை வரும். அப்போது தன் ரசிகர்களை களமிறக்குவார். அதனால் தான் லோக்சபா தேர்தலில் ரஜினி எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. அதே நிலைப்பாட்டையே உள்ளாட்சி தேர்தலிலும் எடுத்துள்ளார்; அவரது முடிவு தான் சரியானது.

இந்த அறிவிப்பை ரஜினி வெளியிடாமல் இருந்திருந்தால் ஆர்வக் கோளாறில் ரஜினி ரசிகர்கள் போட்டியிடுவர். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் ரஜினி துவக்க உள்ள கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மேலும் ரஜினி பெயரை பயன்படுத்தி வெற்றி பெறும் தனிப்பட்ட நபர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே தான் முறையாக கட்சி துவங்கி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த பின் தன் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ரஜினி விரும்புகிறார். தற்போது அவரது மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியிடும் அறிக்கைகளும் அறிவிப்புகளும் தேசிய அளவில் எதிரொலித்து அதிர வைக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கமல் கட்சியும் தயக்கம்:



உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என கமலின் மக்கள் நீதி மையம் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் பங்கு பெறுவதால் கிடைக்கும் முன்னேற்றம் சொற்பமானது. மக்கள் நீதி மையத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ பண பலமோ அல்ல; நேர்மையும் மக்கள் பலமுமேயாகும்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பங்கீடு குறைவாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள்ளே போட்டுக் கொண்ட வியாபார பங்கீடு மட்டும் அரங்கேறப் போகிறது என்பதே பகிரங்கப்படாத நிஜம். ஆதலால் ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நம் பிரகடனாக இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26 + 34)

  • Siva - Aruvankadu,இந்தியா

    தம்பி ஒழுங்கா இஸ்கூலுக்கு போப்பா... ரோட்டில திரியாதே...

  • prakash - kanchipuram,இந்தியா

    Staright ha America president thaan. rajinikanth & Kamalhasan ku ethachum saaku sollu ullatchi election ku selavu panna koodathu. Vera ethuvum. Illa

  • Mayavan Mayavan - Chennai,இந்தியா

    கை கோர்த்த பிக் மற்றும் பிக்

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    அரசியலில் நேரம் காலம் முக்கியம் உள்ளாட்சி தேர்தல் கட்சியை பார்க்கமாட்டார்கள் தெரிந்தவர்களை ஆதரிப்பார்கள் அதனால் போட்டி இடாமல் இருப்பதே நல்லது.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    அர்ஜுனனின் இலக்கு கனி மாதிரி , ரஜினி அவர்களின் இலக்கு சட்ட மன்ற தேர்தல் தான் , நிச்சயம் மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவார்.

உள்ளாட்சி தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு இல்லை (10)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    IVAR சொல்பவருக்கு எவனும் ஒட்டு போட மாட்டான்

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    //யாருக்கும் ஆதரவு இல்லை// RSS - BJP கூட்டத்துக்கு குடுத்துத்தான் பாரேன் 🤔

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    இது ஒரு தானியங்கி விளம்பர உத்தி. ஒன்றுக்கும் உதவாத விளம்பர தம்பட்டம். இவர் என்ன MGR போலெ ஓட்டு வங்கியா மக்கள் இவர் பேரை பார்த்து ஓட்டு போட. அந்த காலம்வேறு.இந்த காலம் வேறு.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    படம் எதுவும் தற்போது வெளிவரவில்லை போலும், ஒரு புறம் இவர் இரண்டாவதாக திமுக சம்மந்தி, சுப்ரமணி சாமி வேறு இவர் அரசியலுக்கு வந்தால் ,,,,, செல்வார் என்று கூறியிருக்கிறார் ? எது எப்படியோ வந்தே மாதரம்

  • Balaji - Chennai,இந்தியா

    அடடா மக்கள் குழம்பிப்போயி ஒட்டு போடா போவலென்ன? பேசாம எலேச்டின் கான்செல் பண்ணிபுடலாமா?

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஹலோ, பூஜ்ஜியத்தை தசமத்துக்கு முன்னாள் சேர்ப்பதால் ஒரு எண்ணின் மதிப்பு கூடவே கூடாது. (.46., 0.46)

  • rajesh -

    அய்யா நீ ஒம்பாட்டுக்கு என்னமோ செஞ்சிக்கோ.... நீ ஆதரவு தந்தாலும் தரலேன்னாலும் ஒரு மாற்றமும் நடமாகப்போறதில்லே...... நீ மொதல்ல கட்சி ஆரம்பித்து ஒரு பொது கூட்டம் நடத்தி ஒரு 1 மணி நேரம் பேசு மக்கள் பிரச்சனையை பத்தி பேசு சினிமா வசனம் கலக்காமல்

  • Suri - Chennai,இந்தியா

    இல்லன்னா மட்டும்?? இவனுங்கள் ஏன் இப்படி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்???

    • ezhumalaiyaan - Chennai,இந்தியா

      சுய விளம்பரம்.தவிர்க்க வேண்டுகிறேன்.என்னவோ,இதுவரை தமிழ்நாட்டில் அமைந்த ஆட்சிகள் இவர்கள் சொல்லித்தான் அமைந்தது போல.மீடியாக்களும் முந்திச்சென்று இவர்களை கேட்பது ஏன்?

  • Arunachalam, Chennai - ,

    சிரிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டாம்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை: கமல் (24)

  • bal - chennai,இந்தியா

    ஏற்கனவே டெபாசிட் காலியானதால் இந்த தேர்தலில் டெபாசிட் வழங்க முடியவில்லைபோலும்.

  • konanki - Chennai,இந்தியா

    இடைத்தேர்தல் ,பஞ்சாயத்து தேர்தல் எதிலும் போட்டி போட மாட்டோம் . ஆனால் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகணும் . ஏன்னா நாங்க தான் தமிழ் நாட்டிலேயே ஒரிஜினல் அக்மார்க் புத்திசாலி

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    தோல்வியை மறுபடியும் சந்திக்க திராணி இல்லை என்று சொல்லி இருக்கலாம்..

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    பயம், பயம், டயலாக்தான் ஞாபகம் வருது.

    • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

      போட்டி இட்டு தி மு க வின் வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்று நினைக்கிறார்.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    அடிமட்டத்திலிருந்து கட்சியை வளர்க்க இத்தேர்தல் பயன்படும், ஆனால் ஆளும் கட்சி பண பலத்தின் மீது நம்பிக்கை வைத்து குறுக்கு வழியை தேர்ந்தெடுத்திருக்கின்றது. அவர்களின் எஜமான கட்சியை போல் வெற்றி பெற்றவர்களை வளைத்து விடுவது போல், அதே முறையை பின்பற்ற ஆலோசனை கூட வழங்கி இருக்கலாம். உள்ளாச்சி தேர்தல் வெற்றியை மக்கள் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என்று கூட கமல்ஜி நினைத்து விலகியுள்ளார் என்றே எடுத்து கொள்வோம்.

  • Sabesh - Hindustan,இந்தியா

    நோ லோக்கல் போட்டி... ஒன்லி அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் போட்டி

  • konanki - Chennai,இந்தியா

    ஐயோ அரசாங்க வருவாய் போச்சு. நிக்கற எல்லா சீட் லயும் டெபாசிட் போகும் . அந்த பணம் அரசாங்கத்திற்கு கிடைச்சிருக்கும்

  • Sabesh - Hindustan,இந்தியா

    'சாந்து பொட்டு... ஒரு சந்தனப்பொட்டு... எடுத்து வெச்சுக்க வெச்சுக்க மாமா... பூமுடிச்சு ஒரு சேலையைக்கட்டு... இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா?'

  • தேவதாஸ், பூனே -

    அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டி இல்லை......அதை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டி இல்லை......

  • ALNachi UK - ,

    நன்றி

  • முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்

    இது நம்பில் கி.. தூதர் சொன்னே.. புக்கு மேலே.. இருக்கி..

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    சரியான முடிவு .கட்சிக்காரர் அனைவர் பணமும் பத்திரமாக சேமிக்க பட்டு விட்டது .நன்றி .

  • ஸாயிப்ரியா -

    தெரிந்த விஷயம். நானும் அரசியல் வாதி தான். ஓகே வா ஜி.

  • spr - chennai,இந்தியா

    சீ சீ இந்தப் பழம் புளிக்கும் அவர் சூப்பர் ஸ்டார் இவர் உலக நாயகன்

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Komali yentha therthalilum potti poda povathillai vaayaal vadai suduvathuthaan muzhunera thozhil

  • மயிலை ரங்கன் -

    மற்ற கட்சியினர் நிம்மதி பெருமூச்சு.

  • மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா

    அய்யய்யோ, ஏன் இப்படி தலீவா? நாடகத்தில் நடிக்க சம்பளம் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா?

  • kumar - Chennai,இந்தியா

    You are exposed totally and don't say excuses to cover-up your weaknesses.Stop lecturing and get in to field ...fight it out ..why wait until 2021

  • Balaji - Khaithan,குவைத்

    முதலில் இதுபோன்ற உள்ளாட்சிகளில் காலூன்ற கிடைக்கும் சந்தர்ப்பத்தை இவர்கள் இருவரும் பயன்படுத்தினால் தான் சட்டமன்ற தேர்தலை எப்படி அணுகலாம் என்ற அனுபவம் கிடைக்கும்....... இதுபோன்ற தேர்தல்களை சிறிது இடங்கள் கிடைப்பது கட்சியின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கும்......... இதை உணராமல் வாய்ப்புகளை நழுவவிடுகிறார்கள்....... இதில் போட்டியிட்டு குறிப்பிட்ட இடங்களை பெறாவிட்டால் கட்சிக்கு பின்னடைவாக கருதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.........

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டத்திற்கு போக வழி காட்டுவேன் என்பது போல் உள்ளது இவரின் பிதற்றல்

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    தவணை முறையில் வெற்றி கனியை பறிக்க இவர் விரும்பவில்லை. ஒரே நேரத்தில் வெற்றி கனியை பறித்து மக்களை பரவச படுத்துவதே இவரது நோக்கு. ரஜினியும் யாருக்கும் ஆதரவு இல்லை என கையை விரித்து விட்டார்.பாவம் கண்ணியமாக ஒதுங்கி விட்டார்.சபாஷ்.

    • Kadaparai Mani - chennai,இந்தியா

      ஒரே நேரத்தில் வெற்றி கனியை பறித்து மக்களை பரவச படுத்துவதே இவரது நோக்கு. ரஜினியும் யாருக்கும் ஆதரவு இல்லை என கையை விரித்து விட்டார். பாவம் கண்ணியமாக ஒதுங்கி விட்டார்.சபாஷ். ஜனநாயக விரோத கருத்து .உள்ளாட்சி போட்டி போடாதவர்கள் எப்படி சட்ட சபையில் போட்டி போட முடியும் . டிகிரி படிக்காதவர்கள் எப்படி ஆராய்ச்சி முதுகலை பட்டங்களில் சேர முடியும் .

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    களமறிந்தோர் களம் புக்கார்🤣🤣🤣 களம் புகுவோர் கவுந்தடிப்பார் 🤣🤣

Advertisement