Advertisement

இதே நாளில் அன்று

டிசம்பர் 9, 1989



மதுரை எஸ்.சோமு: தஞ்சையில், சச்சிதானந்தம் -- கமலாம்பாள் தம்பதிக்கு, 1919, பிப்., 9ல் பிறந்தார். கர்நாடக இசையை, சேஷ பாகவதர், அபிராம சாஸ்திரி மற்றும் சித்துார் சுப்ரமணியத்திடம் கற்றார். இவர் தந்தை, மதுரையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், தன் பெயருடன், மதுரையையும் சேர்த்துக் கொண்டார்.

இவர், தன் முதல் கச்சேரியை, 1934ல், திருச்செந்துாரில் நிகழ்த்தினார். கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி, மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் சிறப்பு பெற்றிருந்தார். 1979ல், திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும், தமிழக அரசின் அரசவை கவிஞராகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார்.

1972ல் வெளியான, தெய்வம் படத்தில், 'மருதமலை மாமணியே முருகையா...' என்ற பாடலை பாடினார்.இவரது இசை சேவையை பாராட்டி, கவுரவ முனைவர் பட்டத்தை, 1979ல், அண்ணாமலை பல்கலை வழங்கியது. பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருதுகளை பெற்றவர். 1989 டிச., 9ல் காலமானார்; அவர் இறந்த தினம் இன்று.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement