Advertisement

விரைவில் ரூ.1 லட்சம் கோடி வரி; சொல்கிறார் சிதம்பரம்

காரைக்குடி: ''மக்கள் மீது ரூ.1 லட்சம் கோடி வரியை மத்திய அரசு சுமத்த உள்ளது,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்த அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி சேமித்த ரூ.1.75 லட்சம் கோடியை மத்திய அரசு கட்டாயமாக எடுத்து கொண்டது. ரூ.1.50 லட்சம் கோடியை 800 கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக கொடுத்து விட்டது. இதன் மூலம் ஏற்பட்ட பற்றாக்குறையை போக்க அடுத்த 10 நாட்களுக்குள் ரூ. ஒரு லட்சம் கோடி வரியை மக்கள் மீது சுமத்த உள்ளனர்.

ஜி.எஸ்.டி., வரியையும் உயர்த்த போகின்றனர். 8 சதவீதம் 12 ஆகவும், 12 சதவீதத்தை 18 ஆகவும் உயர்த்த உள்ளனர். திஹார் சிறையில் எனக்கு 'குறை ஒன்றும் இல்லை'. தெலுங்கானா என்கவுன்டர் விஷயத்தை ஆழமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழகத்தில் மாநில அரசு நடக்கவில்லை. டில்லி என்ற சூத்ரதாரி நுாலை ஆட்ட அதற்கேற்ப ஆடும் அரசு உள்ளது.

தேர்தலின் போது மக்களின் அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்தினால் நாடு நேர்மையாக செல்லும். பொருளாதாரச்சிதைவு, சமுதாய அமைதியின்மை, பெண்கள் மீது வன்கொடுமை, வேலையின்மை போன்ற காரணத்தால் பா.ஜ.,விற்கும், மக்களுக்கும் தர்மயுத்தம் நடக்கிறது, என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (59)

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  திஹார் சிறையில் எனக்கு 'குறை ஒன்றும் இல்லை'. ... அப்புறம் என்னத்துக்கு ஜாமீனுக்கு அப்படி அலஞ்சாரு நம்ம அப்புச்சி.. உள்ளேயே வச்சிருந்தா அவருக்கு நல்லதுங்கிறாரு.. நாட்டுக்கும் நல்லது.. செய்ங்க எஜமான் கூடிய சீக்கிரம்.. இந்தாளு ஜாமீன் கண்டிஷன் எல்லாத்தையும் மீருறாருன்னு புடிச்சி அமுக்குங்க

 • sankar - Nellai,இந்தியா

  பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதால் சேற்றை வாரி இறக்கிறார் - சேறு படாத தொலைவில் அரசும் - ஆகா சேறு உன் தலைமீது

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ஒரு முன்னாள் நிதி மந்திரி போல் பேசாமல் , படிக்காத உபிஸ் போல பேசியிருக்கிறார் இந்த அறிவாளி. வரிவருவாய்தான் ஒரு அரசாங்கத்திற்கு வருமானம் , அதை வைத்துதான் அரசாங்கம் நடக்கிறது ,சமூக நலன் சார்ந்த திட்டங்களும் , நாட்டின் கட்டமைப்பும் செய்யப்படுகிறது. இனிமேல் தான் இவருக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

  • truth tofday - india,இந்தியா

   அதற்காக சம்மதிக்கும் எல்லா பணத்தையும் வாரியாக கொடுத்துவிட்டு கோயில்களில் சுற்றுக்கு நிற்க்க வேண்டுமா

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  ஒன்னும் வேண்டாம் அரசு இவன் எந்தெந்த கன்றீஸ் லே சொத்துவங்கிருக்கானுகளோ அந்தச்சொத்து வைக்கவும் இயலாது சொந்தமாக்காவும் முடியாது எல்லாம் அந்த தேசத்தின் சொத்துக்களாயிடும் என்று சொல்லவேண்டியதுதான் உடனே இதுகளெல்லாம் பயித்தியம் பிடிச்சு திரியுமுங்கோ சோனியாவும் விதிவிலக்கே இல்லீங்க ரெட்டைக்குடியுரிமைன்னு இத்தாலிலே பெரிய மாளிகை கட்டிருக்காளே அதுவும்கூட அவளுக்கு இல்லே என்று சொல்லவேண்டும், இந்துக்களுக்கு என்னாத்துக்கு ராஜிவ் பென்சன் தரணும் வீடு பிரீ யா தரணும் அவ ராகுல் எல்லாம் எம்பி க்களேதானே எம்பி குவார்ட்டர்ஸ் போதுமே இவாளுக்கென்னாதுக்கு இலவசமா வீடுஒதுக்கணும் பிரியங்காவுக்கும் பிரீ +துட்டு என்னாத்துக்கு தரணும்

 • ashak - jubail,சவுதி அரேபியா

  இவர் மீது ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படல பொருளாதார வீழ்ச்சியை பற்றி பேசியதால் சிறையில் வைக்கப்பட்டார் ஆறு வருடம் ஆகியும் பொருளாதார பிரச்சனையில் இவர் பற்றி பேசுவது மூடத்தனத்தின் உச்சம்

Advertisement