Advertisement

ஆளுங்கட்சி தொடர்பை துண்டிக்காவிட்டால்...! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: ''ஆளும் கட்சியினர் உடனான தொடர்பை உடனே துண்டிக்க வேண்டும்; இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாவட்ட செயலர்களுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி மற்றும் மாநில நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இங்கு கூடியிருக்கும் நிர்வாகிகளில் பாதிக்கும் மேலானோர், அவரவர் மாவட்டங்கள், தொகுதிகளில் உள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினருடன் தொடர்பு வைத்துள்ளனர். யார், யாருடன் தொடர்பு வைத்துள்ளீர்கள் என்ற தகவல், எனக்கு ஆதராரப்பூர்வமாக கிடைத்துள்ளது.

அ.தி.மு.க.,வினர் நம் கூட்டணி கட்சி அல்ல; எதிர்க்கட்சி. ஆளுங்கட்சியின் தவறுகளை, பொது மக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டியவர்கள், அவர்களுடன் மறைமுகமாக தொடர்பு வைத்து, கட்சிக்கு துரோகம் செய்கிறீர்கள். இந்தக் கூட்டம் முடிந்ததும், உங்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் உள்ள தொடர்புகள் துண் டிக்கப்பட வேண்டும். மீறி, ஆளுங்கட்சியினருடன் தொடர்பு நீடிக்குமானால், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.

தர்மபுரியில் நடந்த கூட்டத்தில், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்து, நான் பேசிய பேச்சின் குறிப்புகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு, தெருமுனை கூட்டங்களில் பேச வேண்டும். ஆளுங்கட்சியின் ஊழல்களை மறைத்து பேசினால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது ஓரிரு நாளில், நீதிமன்றம் வாயிலாக தெரியவரும். தேர்தல் நடத்த உத்தரவிட்டால், அதற்கு தயாராகி, வெற்றி பெற்றாக வேண்டும்; தேர்தல் நடக்காவிட்டால், தெருமுனை கூட்டங்களை நடத்துங்கள்.இவ்வாறு, ஸ்டாலின் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.

நீதிமன்றத்தை நாடுவோம்!மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு போன்ற சட்ட நெறிமுறைகளை செய்து முடித்த பின், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி, மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என, ஸ்டாலின் தெரிவித்த கருத்து ஏற்புடையது.

* உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும், 'மக்கள் நம் பக்கம்' என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேருக்கு நேராக சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட, தி.மு.க., தயாராக இருக்கிறது.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  அப்போ சுடலை திமுகவிலும் ஸ்லீப்பர் செல் உள்ளது என்பதை ஆமோதிக்கிறார் கட்சியில் ரகசியமாக நடக்கும் கூட்டத்தின் முடிவுகள் ஆளும் கட்சிக்கு தெரிகிறது என்றால் என்ன அர்த்தம் . சுடலை யார் யார் அதிமுகவுக்கு தன் கட்சியின் ரகசியங்களை கசிய விடுகிறார்களோ அவர்களை இனம் கண்டு வெளியேற்ற வேண்டும்

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  தலெக்கீலா நின்னுமுட்டிண்டாலும் நோ சான்ஸ் சார் எவனும் ஒரிஜினல் திமுக அதிமுகவே இல்லீயே காற்றுள்ளபோது தூற்றிக்குவாங்க தலையும் நானே வாலும் நானே என்று நீயும் உன்பிள்ளையும் குதிச்சால் நீரும் உன்பிள்ளையும் பேரனும் +துரையாண்டியும்தான் மிச்சம் இருப்பீங்கய்யா மக்களையே இப்போது ஓரளவு படிச்சகூமுட்டைகள் அதிகம் முக காலத்துலே எல்லோரும் அவராட்டம்தான் 5ம்கிளாஸ் பட்டதாரிகளா இருந்தாங்க

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  இருக்கும் நாலைஞ்சு பெரும்பூட்டா இவனும் இவன்குடும்பன்=மும்தான் காட்ச்சில் இருக்கும் போனால்போறதுன்னு பல்லுபோக்கிலாம் ரைத்தண்டு கூடவே இருக்கும் மாட்டின்மீது ஒட்டிண்டு ஒட்டுண்ணிபோல

 • Siva - Aruvankadu,இந்தியா

  தமிழா... பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பின் இப்போது தான் ஒரு தமிழர் தமிழ் நாட்டை ஆள்கிறார்.... அவர் நல்லாட்சி நடத்த நாம் ஆதரவும் முடிந்தால் ஆலோசனையும் வழங்குவோம்.....நன்றி.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  ஆக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்

Advertisement