Advertisement

கமல் தான் வருத்தப்பட வேண்டும்: ஜெயகுமார்

சென்னை: ''ரஜினியின் முடிவால், கமல்தான் வருத்தப்பட வேண்டும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

வடசென்னையில், அவர் அளித்த பேட்டி:தி.மு.க., மக்களை சந்திக்க அஞ்சுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் போது, ஒரு மாதிரியும், தேர்தல் அறிவிப்பின் போது, ஒரு மாதிரியும், ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க., முரண்பாடுகளின் உச்சமாக உள்ளது.தமிழகத்திற்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 7,300 கோடி ரூபாய் மட்டுமே வர வேண்டியுள்ளது. சரியான தகவல் தெரியாமல், தி.மு.க., தலைவர் குற்றம் சாட்டுகிறார். தமிழக மக்களை ஏமாற்ற, தினம் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.

குடியுரிமை சட்ட மசோதாவை பொறுத்தவரை, மக்களை பாதிக்காத வகையில், அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு இருக்கும். தி.மு.க., போல, வாய் பேசாமல் இருக்க மாட்டோம்.யாருக்கும் ஆதரவில்லை என, ரஜினி கூறியது குறித்து, கவலைப்பட வேண்டியது கமல் தான். இணைந்த கைகள் என்றனர். 'என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது' என, ரஜினி கூறுகிறார்; 2021லிலும் இதையே தான் கூறுவார்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement