Advertisement

தேர்தலை சந்திக்க ஸ்டாலின் அச்சம்: கோவையில் முதல்வர் பேட்டி

கோவை: ''உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அஞ்சுகிறார்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். யாரால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போகிறது என்பதை, இப்போது ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில், வார்டு வரையறை செய்து, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது.தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்பது, தி.மு.க.,வினர் நோக்கம். ஸ்டாலின், 2016ல் தேர்தலை நிறுத்த முயன்றது போல், தற்போதும் முயற்சி செய்கிறார்.தி.மு.க., தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது; தயங்குகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின், மீண்டும் நீதிமன்றம் செல்கிறார்.ஒவ்வொரு முறையும் ஊடகத்தினரை சந்திக்கும் போது அ.தி.மு.க., வுக்கு, 'தில் உள்ளதா, திராணி உள்ளதா' என கேள்வி எழுப்புவார். அதே கேள்வியை, நாங்கள் தற்போது எழுப்புகிறோம்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

    அப்படியே நீங்க ரொம்ப நல்லவீங்க. தேர்தல் வந்த என்ன பண்ணுவீங்கன்னு ஸ்டாலினுக்கு தெரியும் போது மக்கள் ஆகிய எங்களுக்கும் தெரியும். இது பயம் இல்லை கண்ணு மக்கள் எவ்வளவு கேவலமா ஆக்கிருக்கீங்கனு வருத்தம்.

  • unmaitamil - seoul,தென் கொரியா

    பேருதான் தளபதி. உண்மையில் கோமாளி.

    • dandy - vienna,ஆஸ்திரியா

      வாய் கூட சுடலைக்கு கோணல்...கட்டுமரம் உயிரோடு இருந்து பார்க்கவில்லையே .....பாவம்

  • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

    தெனாலி போல் எதெற்க்கெடுத்தாலும் பயமோ.

  • sudhapriyan - Chennai,இந்தியா

    அடடா என்ன அருமையான விளக்கம் .. நம்பிட்டோம் ....

Advertisement