Advertisement

இரண்டு கட்ட தேர்தல் பட்டியல் வெளியிட ஆணையம் தயக்கம்

சென்னை: மனுதாக்கல் இன்று துவங்கவுள்ள நிலையில் இரண்டு கட்டங்களாக எங்கெங்கு தேர்தல் நடக்கிறது என்ற விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இரண்டு கட்டங்களாக டிச. 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத்தில் எந்தெந்த உள்ளாட்சிகள் இரண்டாம் கட்டத்தில் எந்தெந்த உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கும் என்ற விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.

இது தொடர்பாக பொதுமக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தொலைபேசி வாயிலாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை. 'தேர்தல் நடத்தும் அலுவலரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையத்திற்கு tnsec.tn.nic.in என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தில் இந்த விவரங்களை பதிவேற்றி இருக்கலாம். சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தகவல்களை பரப்பி இருக்கலாம். தேர்தல் அறிவித்தபிறகும் வெளிப்படை தன்மை இல்லாமல் ஆணையம் நடந்து கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    ஒரு ஊராட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வக்கில்லாத அரசு ...... என்னத்த சொல்ல ....

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இவர்களுக்கு தேர்தலை நடத்தாமல் குழப்பி விட்டு திமுகவை காரணம் காட்டணும். அதுதான் திட்டமே. பயந்தாங்கொள்ளி பயனிசாமி..

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    எப்படியானாலும் திமுக சர்வாதிகாரி நீதிமன்றத்தில் தடை வாங்கிடுவார்னு அசைக்க முடியாத நம்பிக்கை

Advertisement