Advertisement

இ.எஸ்.ஐ., திட்டத்தால் தொழிலாளர்களுக்கு என்ன பலன்

மதுரை இணை இயக்குனர் (பொறுப்பு ) எம்.அருள்ராஜ் பேட்டி


தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவசர மருத்துவ சிகிச்சை பெற உதவுகிறது மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.,). மாதம் ரூ.21 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இதில் சந்தா செலுத்தி உறுப்பினராகும் பட்சத்தில் அவசர காலங்களில் அவரோ, அவரது குடும்பத்தினரோ இ.எஸ்.ஐ., மருத்துவ மனை அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்துள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

இ.எஸ்.ஐ., திட்டத்தின் பயன்கள், பங்களிப்புக்கான நிபந்தனைகள், பயன்பெறும் கால வரையறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மதுரை துணை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) எம்.அருள்ராஜ் அளித்த சிறப்பு பேட்டி...

இ.எஸ்.ஐ., குறித்து?



மத்திய அரசின்தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இ.எஸ்.ஐ., செயல்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு நான்கு துணை மண்டலங்கள் செயல்படுகின்றன.


மதுரை துணை மண்டலத்தில் எத்தனை மருத்துவமனைகள் உள்ளன?



இத்துணை மண்டலத்தில் மதுரை கே.கே.நகர், திருநெல்வேலியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளன. இத்துடன் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து விதமான சிகிச்சையளிக்கப்படுகிறது.

*

இத்துணை மண்டலத்தில் எந்தெந்த வருவாய் மாவட்டங்கள் உள்ளன?



மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை
மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் செயல்படும் 14 கிளை அலுவலகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படுகின்றன.

* எத்தனை தொழிற் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்?



இத்துணை மண்டலத்தில் 18 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைந்துள்ளன. இவற்றில் பணிபுரியும் நாலரை லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., திட்டத்தில் சந்தா செலுத்தி வருகின்றனர். அவர்கள், குடும்பத்தினர் உட்பட 18 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.

* இத்திட்டத்தில் இணைவது எப்படி?



பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள்
கட்டாயம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைய வேண்டும்.தொழிலாளர்கள் தொழில்நிறுவனங்கள் மூலம்இத்திட்டத்தில் இணைந்து சந்தா செலுத்த வேண்டும். 0.75 தொழிலாளர்கள்,3.25 தொழில் நிறுவனத்தினர் என 4 சதவீதம் சந்தா செலுத்த வேண்டும். திட்டத்தில் நுழைந்த நாள் முதல்
மருத்துவ உதவி பெறலாம். சிறப்பு மருத்துவ சிகிச்சை உதவி பெற குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காப்பீடு திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும்.

* இ.எஸ்.ஐ., திட்டத்தில் வழங்கப்படும் இதர உதவிகள் என்ன?



மகப்பேறு செலவினங்களாக மகப்பேறு மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் காப்பீடு பெற்ற பெண்ணுக்கோ அல்லது காப்பீடு பெற்றவரின் மனைவிக்கோ பிரசவம் நிகழுமாயின் இந்த உதவி வழங்கப்படும். இரு பிரசவத்திற்கு மட்டும் வழங்கப்படும். ஒரு பிரசவத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ஈமச்சடங்கு செலவினமாக சந்தா செலுத்தி வரும் நிலையில்
இறந்தால் இறுதி சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.


வேலையிழந்தோருக்கான உதவி தொகையாக தொழிற்சாலைகள் நிரந்தரமாகமூடல் அல்லது ஆட்குறைப்பு அல்லது பணி சாராவிபத்துக்களால் ஏற்படும் ஊனம் காரணமாக ஏற்படும்
வேலையிழப்பிற்கு 24 மாதம் வரை வழங்கப்படும்.


3 முதல் 5 ஆண்டுகள் சந்தா செலுத்தும்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இ.எஸ்.ஐ.,
மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவையில் இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரிகள் செயல்
படுகின்றன.

* குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறதாமே?



மதுரை துணை மண்டல அலுவலகத்தில் மாதந்தோறும் 2வது புதன்கிழமை பகல்
3:00 மணிக்கு இணை இயக்குனர் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. 2வது வெள்ளி தோறும் 14 கிளை அலுவலகங்களில் நடக்கிறது. இதுதவிர கட்டணமில்லா
தொலைபேசி 1800 425 2527 ல்சந்தா செலுத்துவோர் குறைகளை தெரிவிக்கலாம்.

* இத்திட்டத்தில் இணையாத தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை உண்டா?



பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுடன் செயல்படும் நிறுவனங்கள் இணையாத பட்சத்தில் நீதிமன்றம் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இ.எஸ்.ஐ., திட்டம் குறித்து விவரங்கள் பெற தொழிலாளர்கள்,தொழில் நிறுவனத்தினர் 0452-253 1074 அல்லது
86808 61400ல் என்னை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பேட்டியளித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நிறைய பொய் .இந்த மருத்துவமனைகளில் தொழிலாளர்களை மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள் .இத்தனைக்கும் ஓ.சி iyl அல்ல முன்னதாகவே சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்துகொள்வார்கள் . மருத்துவ history எழுத நோட்டை கூட தொழிலாளி தான் வாங்கி கொடுக்கணும் .இங்கே இடைத்தரகர்கள் தொழிலாளிகளுக்கு லீவு வாங்கி கொடுத்து பணம் சம்பாதிப்பார்கள் .பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் வார இதழில் ஒருகட்டுரை வந்தது அதில் சாந்தோமில் மருத்துவமனை மருந்துகள் வெளியாருக்கு விற்கப்படுவதாக இப்போது எப்படியோ .திட்டம் மிகநல்ல திட்டம் அலுவலர்களும் தொழிலாளிகளும் அதை நாசம் செய்கின்றனர்

Advertisement