Advertisement

கண்மாய்கரை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

திருப்புத்துார்:பூலாங்குறிச்சி உசிலம்பட்டி புதுக்கண்மாய் கரை ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் உத்தரவிட்டனர்.
இக்கிராமத்தில் கருப்பர் ஆலய வழிப்பாட்டிற்காக புதுக்கண்மாய் கரையில் சுவாமி செல்லும் வழி உள்ளது. கண்மாய் கரையில் முள்வேலியிட்டுதனியார் தோட்டத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். கிராமத்தினர் திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்த போதுகண்மாய்கரையை மண் அள்ளும் இயந்திரத்தால் சமப்படுத்தி அதில் கல்துாண்கள் ஊன்றி முள்வேலியிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.வேலியை அகற்றி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement