Advertisement

பள்ளியில் கல்விச்சீர் விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே நக்கனேரி சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் திருவிழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.தெற்கு குரு சேகர தலைவர் பால்தினகரன், வட்டார கல்வி அலுவலர் முருகேசன் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக கிராம மக்களுடன் சேர்ந்து பெற்றோர்கள் கல்விச்சீர் எடுத்து வந்தனர்.தலைமை ஆசிரியை சாந்தகுமாரி, வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் முன்பு வரவேற்று பெற்றுக் கொண்டனர். சவுந்தரராஜன் ஞானமுத்து நன்றி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement