Advertisement

பல ஆயிரம் ரூபாயில் விருப்பமனு ஒரு ரூபாயில் வேட்புமனு விண்ணப்பம்

ஸ்ரீவில்லிபுத்துார்:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் பல ஆயிரம் ரூபாயில் விருப்பமனு வழங்கியநிலையில் தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பம் ஒரு ரூபாயில் வழங்கப்பட்டதால் மனு வாங்க வந்தோர் சில்லரை காசுகளை தேடினர்.
, நடக்காதா என்று தெரியாதநிலையில் நேற்று முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்துவதால் ஊராட்சி தலைவர் ,உறுப்பிவர், ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்புமனு விண்ணப்பங்களை பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் ஆர்வமுடன் பெற்றனர். வேட்புமனு விண்ணப்பம் கட்டணமாக ஒரு ரூபாய் வாங்கப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்கள் வேட்பு மனு விண்ணப்பத்துக்கு ஒரு ரூபாய் கட்டணத்தை தேர்தல் அலுவலகர்கள் கேட்டபோது அதிர்ச்சியடைந்தனர். ஒரு ரூபாய் நாணயம் கிடைக்காமல் தவித்தனர். பின்னர் உடன் வந்தவர்களிடம் பெற்று அதிகாரிகளிடம் கொடுத்தனர்.உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தங்கள் கட்சியினரிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் விருப்பமனு பெற்றநிலையில் மனு விண்ணப்பம் ஒரு ரூபாய்க்கு கொடுத்தது போட்டியிட விரும்பும் கட்சியினரிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement