Advertisement

அருப்புக்கோட்டையில் முதுமக்கள் தாழிகள்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் தோண்ட தோண்ட முதுமக்கள் தாழிகள் கிடைப்பதால் அங்கு ஆய்வு செய்தால் மேலும் அரிய தகவல் கிடைக்கலாம் என விருதுநகர் அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை தெற்கு தெரு சட்ட கல்லுாரி மாணவர் விக்னேஸ்வரன். விடுமுறை நாட்களில் மரக்கன்றுகளை நடும் பணியை செய்து வருகிறார். பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நட தோண்டிய போது 5 அடி உயர பெரிய மண் பானை இருப்பதை கண்டார். இதை முதுமக்கள் தாழி என வருவாய்துறையினர் உறுதிப்படுத்தினர்.இதையடுத்து நேற்று விருதுநகர் அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் பெரிய கண்மாய் பகுதியில் ஆய்வு செய்தார். அப்பகுதியில் தோண்ட தோண்ட அதிக அளவில் பானைகள் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
கிருஷ்ணம்மாள் கூறுகையில், '' இது முதுமக்கள் தாழி. ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால நாகரிகத்தை சார்ந்தது. அப்போது இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement