Advertisement

டவுட் தனபாலு

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்: குடியுரிமை மசோதா, அரசியல் சாசனத்திற்கு முரணானது. இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம், பா.ஜ., மோசமான பின் விளைவுகளை சந்திக்கும். மதங்கள் இடையே பாகுபாடு செய்யக் கூடிய வகையில், இந்த மசோதா உள்ளது.

'டவுட்' தனபாலு: உங்களின் கண்டனங்களை, 'வெற்றுக்கூச்சல்' என, மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. ஏனெனில், மோடி அரசின் திட்டங்களில் ஏதாவது ஒன்றையாவது நீங்கள், 'நல்ல திட்டம்' என, பாராட்டியிருந்தால், உங்களின் கண்டனங்களை, அவர்கள் கருத்தில் கொள்வர். இப்படித் தானே, இதற்கு முந்தைய உங்களின் காங்., ஆட்சியிலும், உங்கள் அரசின் செயல்பாடுகள் இருந்தன; மறந்து விட்டீர்களோ என்பதே என், 'டவுட்' ஆக உள்ளது.

'நமது அம்மா' பத்திரிகை செய்தி: வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால், தமிழகத்தில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை போக்க, மாநிலம் முழுவதும், 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக, கிலோ, 50 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது; பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'டவுட்' தனபாலு: தமிழக அரசு சார்பில், இன்னும், 200 கடைகள் மூலம், கிலோ, 50 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்பட்டாலும், தமிழக மக்களின் தேவை தீராது. எதுவாக இருந்தாலும், வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதும், மாநிலத்தில் விளைச்சலை அதிகரிக்காததும், தமிழக அரசின் தோல்வி என, மக்கள் பேசுவது உங்கள் காதுகளில் விழவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்பட்டுள்ளது.

பத்திரிகை செய்தி: போலீசார் எனக் கூறி, ஆபாச படங்களை பார்ப்பவர்களை மிரட்டி, மர்ம கும்பல் பணம் பறித்து வருவது, போலீசாருக்கு சமீபத்தில் தெரிய வந்துள்ளது; அந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

'டவுட்' தனபாலு: நல்ல விஷயம் தான். எனினும், மது அருந்துவோருக்கு, கெடுபிடி; ஆனால், மது தயாரிப்போருக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. சிகரெட் தயாரிப்பாளர்களுக்கு, நெருக்கடி கிடையாது; ஆனால், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது குற்றம்.

அந்த வகையில் இப்போது, 'ஆபாச படங்களை தயாரித்து, இணையத்தில் வெளியிடுவோரை பிடிக்க முயற்சிக்காமல், அதைப் பார்த்தவர்களை போலீசார் கைது செய்ய முயற்சிப்பது நியாயமில்லை...' என்ற குரல் வலுத்துள்ளதே, அதை, தமிழக போலீஸ் அறியவில்லையோ என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

    Indian constitution is not a permanent one and not d by the Lord. It was amended several times by the congress when in power. Changes do happen in tune with modern developments. Indian Sonia congress need not bother about it. You people are acting as slaves to Sonia family to loot the country. Please remember you are in bail. First of all you look after your case. Don't bother about the country. Our country is now in safe hands.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அவர்களுக்கு எங்கிருந்து ஆபாசப் படங்கள் வருகின்றன என்பதுகூடத் தெரியாத ‘வெள்ளந்திகளா’ போலீஸ்? அங்கு கைமாறிய பின் இவர்களே கட்டிங் வாங்கிக் கொண்டு வெளியாட்கள் மூலம் பிளாக் மெயில் செய்து பணம் பறிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

Advertisement