Advertisement

சிங்கம்புணரியில் தெரு நாய்கள் தொல்லை

சிங்கம்புணரி:சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சில நேரங்களில் தெருவில் வருவோரை கடிப்பதும், விரட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.

தெருக்களில் கிடைக்கும் உணவுக்காக சண்டையிடும் நாய்கள் சாலைகளில் செல்வோரை மிரள வைப்பதுடன் வேகமாக வந்து இரு சக்கர வாகனங்களில் மோதி அதில் வருவோரை கீழே தள்ளிவிடுவதும் தொடர் கதையாக நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்து போதிய அளவில் இருப்பும் இருப்பதில்லை.

பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். தற்போது பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிங்கம்புணரி பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களின் தொல்லையை ஒழிக்க பேரூராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement