Advertisement

இலவச வீட்டு மனைபட்டா பெற்ற பயனாளிகள் கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் காலனியில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற்ற பயனாளிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


இது குறித்து கலெக்டர் கிரண் குராலாவிடம் அளித்த மனு:சங்கராபுரம் வட்டம், காட்டுவன்னஞ்சூர் காலனி மக்களுக்கு கடந்த 1989ம் ஆண்டு ஆதி திராவிடர் நில எடுப்பு மூலம் இலவச வீட்டு மனை பட்டா 90 பயனாளிகளுக்கு தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், நில உரிமையாளர்களான 7 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசு மூலம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலரிடம் முறையிட்டு மனு கொடுக்கப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட் வழக்கு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தனர்.

பட்டா வழங்கிய இடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது நில உரிமையாளர்கள் ரியல் எஸ்டேட் மூலம் இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து கேட்கும் பயனாளிகளை மிரட்டி வருகின்றனர்.எனவே, நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டாவில் வீடு கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement