Advertisement

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ரிஷிவந்தியம், : அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.


ரிஷிவந்தியம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தணிகாச்சலம், உதவி தலைமை ஆசிரியர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கடந்த 1998-99ம் ஆண்டு படித்த மாணவர்கள் 21 வருடம் கழித்து தங்கள் குடும்பத்தினருடன், கலந்து கொண்டு பள்ளி நாட்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும், அப்போது பணிபுரிந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கலையழகன், கோவிந்தராஜ் உட்பட அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி கவுரவித்தனர். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காக கணிப்பொறி, ஸ்பீக்கர், லைட் ஆகியவை வழங்கினர். நிகழ்ச்சியையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.



வைரமுடி நன்றி கூறினார்.சங்கராபுரம்சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 2011ம் ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவி சரசு வரவேற்றார்.நிகழ்ச்சியில் 2011ம் ஆண்டு பணியாற்றிய ஆசிரியர்கள் முகமது கவுஸ், கோவிந்தசாமி, அஜந்தா, ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முன்னாள் மாணவர்கள் தாங்கள் பணியாற்றி வரும் வேலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், கடந்த கால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் ராஜிவ்காந்தி நன்றி கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement