Advertisement

உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பி.டி.ஓ.,க்கள் மணிவாசகம், ரவி தலைமை தாங்கினர். ஊர் முக்கியஸ்தர்கள் அருள், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விளையாடுவதற்காக கிரிக்கெட் மற்றும் வாலிபால் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு, துவக்கி வைக்கப்பட்டது.


தொடர்ந்து கிரிக்கெட் பேட், பால், ஸ்டம்ப், வாலிபால் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், மாசிலாமணி, அலெக்சாண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement