Advertisement

தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம் : விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., ஒன்றிய செயலர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வருகையையொட்டி, மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் சுவற்றில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.இந்த பேனரை, நேற்று முன்தினம் சிலர் கிழித்தததால், தி.மு.க., நிர்வாகிகள் பலர் அங்குசாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் டவுன் போலீசார், ஒன்றிய செயலர் ராஜா உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement