Advertisement

சாலை பாதுகாப்பு வார விழா: மகளிர் தலைக்கவசம் ஊர்வலம்

விழுப்புரம் : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, தலைக்கவசம் அணிந்த பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில், இருசக்கர வாகனங்களில் தலைகவசத்தோடு, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை மகளிர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.


ஊர்வலத்தின் போது கலெக்டர், விபத்து நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.மேலும், இரவில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு இருசக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் பிரதிபலிக்கும் நாடா ஒட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.சாலை பாதுகாப்பு பிரசார வாகனம் மூலம், சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு பற்றி மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஊர்வலம், நான்கு முனை சிக்னல் வழியாக, நேருஜி சாலையில் சென்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.ஊர்வலத்தில், ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாலகுருநாதன் (விழுப்புரம்), முருகேசன் (திண்டிவனம்), டி.எஸ்.பி.,க்கள் சங்கர், ராஜன், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் நாசர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, முத்துக்குமார், கவின்ராஜ், முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர். தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement