Advertisement

கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா: கலெக்டர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது.கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.


ஏ.கே.டி., பள்ளி முன் நடந்த நிகழ்ச்சிக்கு, உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார்.விழாவில், கலெக்டர் கிரண் குராலா, எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஊர்வலத்தை துவக்கி வைத்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ெஹல்மெட் மற்றும் சாலை விதிமுறை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலைகளில் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். வாகனத்தின் எரிபொருள், பிரேக், மின் விளக்கு போன்றவற்றை பராமரிக்க வேண்டும்.


சாலை வளைவு பகுதிகளில் வாகனங்கள் முந்திச் செல்லக் கூடாது.குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல் கூடாது என்பது உட்பட பல்வேறு சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். வரும் 27ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement