Advertisement

முன்விரோத தகராறு ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.


வரஞ்சரம் அடுத்த சிறுமங்களத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் பழனி, 48; அதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், 52; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் பழனி கடந்த 16ம் தேதி தன்னுடைய உறவினர் பாலசுப்ரமணியன் என்பவருடைய விளைநிலத்தில் களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாராயணன் தரப்பினர், பழனியை ஆபாசமாக திட்டி தாக்கினார். தடுத்த பழனியின் மனைவி செல்லம்மாளையும் தாக்கினர்.


இது குறித்த புகாரின் பேரில், நாராயணன், 52; அவரது மகன்கள் பச்சையப்பன், ராமலிங்கம் ஆகிய மூன்று பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து நாராயணனை கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement