Advertisement

கண்மாயில் கழிவுநீர் கலப்பு; குடிநீர், விவசாயம் பாதிப்பு

தேனி : கண்மாய்களில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு கழிவுநீர் கலப்பதால் நான்கு கிராமங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


பெரியகுளம்,கும்பக்கரை அருவியில் இருந்து விழும் நீர் ,பாம்பாறு வழியாக வரும் நீரால் பொட்டல்குளம், குட்டிக்குளம், நெடுங்குளம் ஆகிய கண்மாய்கள் நிரம்பும். தேங்கும் நீரை பயன்படுத்தி ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களில் சாகுபடி நடைபெறும். சுற்றியுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இக் கண்மாய்களில் 5 ஆழ்துளை குழாய்கள் அமைத்து எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட எண்டபுளி, எ.புதுப்பட்டி, காமாட்சிபுரம், அழகர்நாயக்கன்பட்டி, வேல்நகர் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.


பெரியகுளம் நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நீர், நகராட்சி புல் பண்ணைக்கு பாய்ச்சப்படும். அதில் வளரும் புல் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.கடந்த சில மாதங்களாக கழிவுநீர் புல் பண்ணையில் பயன்படுத்தாமல் பழைய ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகே உள்ள கால்வாய் வழியாக கண்மாயில் கலக்கிறது. இதனால் கண்மாய் நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. விவசாயம் பாதிக்கப்படுவதோடு ஆழ்துளை குழாயில் இருந்து வரும் குடிநீரும் துர்நாற்றம் வீசி பயன்படுத்த முடியாத அளவிற்குள்ளது.


கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் நான்கு கிராம மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருவதாகவும், கண்மாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement