Advertisement

பருவநிலை குறித்து மாணவர்கள் நாடகம்

தேவதானப்பட்டி : சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 'பருவநிலைக்கான குட்டிமா' வின் வார்த்தைகள் என்ற தலைப்பில் நாடகம் நடந்தது.


பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மோகன் வரவேற்றார். வேளாண் ஆய்வு அறிஞர் பாமயன், கவிஞர் ராமமூர்த்தி, அறிஞர் மதியன் இரும்பொறை, அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி, தென்னிந்திய திரைப்படத் துறை பெண்கள் மையத்தின் செயலாளர் ஈஸ்வரி, திரைப்பட இயக்குனர் விஜயகுமார், திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் செந்தில், த.மு.எ.ச. மாநில குழு உறுப்பினர் மோகன் குமாரமங்கலம், த. மு.எ.ச. மாவட்டச் செயலாளர்தமிழ்மணி, எழுத்தாளர் ஏர் மகாராஜா, கவிஞர் தங்கேஸ்வரி, பட்டிமன்ற பேச்சாளர் முத்துக்குமார், தஞ்சை உதிரி நாடக நிலம் விஜயகுமார், வேல்முருகன், திரைக் கலைஞர் மகாலட்சுமி உட்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நாடகத்தில் நடித்த மாணவ மாணவிகளை வாழ்த்தினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement