Advertisement

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வருஷநாடு : மேகமலைசின்னச்சுருளி அருவியில் நீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.


இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் போதிய நீர் வரத்து இன்றி குளிக்க முடியாமல் செல்கின்றனர். மேகமலை, குமணந்தொழு, பொன்னன்படுகை, சிங்கராஜபுரம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு அருவியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அருவியில் நீர் வரத்து குறைந்து விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement