Advertisement

அரசு சார்பில் வீடு கட்டும் பணி தாமதம்

தேவதானப்பட்டி : மஞ்சளாறு ராசி மலைப்பகுதியில் மலைவாழ் மக்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.


தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணையில் மேல்பகுதியில் ராசி மலை உள்ளது. இங்கு பழங்குடியினத்தைசேர்ந்த மலைவாழ் மக்கள் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜி. கல்லுப்பட்டி தொண்டு நிறுவனம் சார்பில் 35 சிமென்ட் சீட் மேற்கூரையுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை, காற்று, வெயில் காலங்களில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அரசு இவர்களுக்கு ரூ. 3 கோடியே 45 லட்சம் செலவில் 35 கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.


8 மாதங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீடு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். 2020 ஜூன் இறுதிக்குள் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை 7 வீடுகள் மட்டுமே சுவர் எழுப்பியுள்ளனர். இதனால் வீடு கட்டும் பணி தாமதமாகி வருகிறது.வசிக்க வீடுஇன்றி பாதிப்புராசிமலை மலைவாழ் மக்கள் கூறியது: மலைகளின் இடுக்குகளில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம்.தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளும் இடித்து அகற்றப்பட்டு விட்டது.


இதனால் மழை வெயில் காற்றால் இங்கு வசிக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டு வருகிறோம்.எனவே அரசு சார்பில் கட்டப்படும் வீடுகளை விரைவாக கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement