Advertisement

திராட்சையை தாக்கும் நோயை தடுக்க தொழில் நுட்ப கூட்டம் நடத்த வலியுறுத்தல்

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் ஒவ்வொரு கிராமத்திலும் நவீன தொழில்நுட்பம், நோய் கட்டுப்படுத்தும் முறைகள், பூச்சிக் கொல்லி மருந்து, உரம் அளவு உள்ளிட்ட விபரங்களை கற்றுத்தர, திராட்சை ஆராய்ச்சி நிலையம் சார்பில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர் .


கம்பம் பள்ளத்தாக்கில் அதிக பரப்பில் திராட்சை சாகுபடியாகிறது. பணப்பயிரான திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விலை கிடைக்கும் போது மகசூல் கிடைப்பதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செவட்டை நோய் உள்ளது. சாம்பல் மற்றும் செவட்டையை தடுக்க வழி தெரியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.தொழில் நுட்ப ஆலோசனை: திராட்சை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், கம்பம் பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும்.


அதில் திராட்சை சாகுபடி தொழில்நுட்பங்கள், முறைகள், நோய் கட்டுப்பாடு முறைகள், உரம், பூச்சி மருந்து பயன்படுத்துவது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விளக்கி கூற வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் கோரியுள்ளனர். ஆனால் தோட்டக்கலைத்துறையும், ஆராய்ச்சி நிலையமும் நோயை கட்டுப்படுத்தவும், ஆலோசனை வழங்கவும் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. வேர்க்குச்சி கொடுப்பதுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக ஆராய்ச்சி நிலையம் கருதுகிறது. வேர்குச்சி கொடுப்பதற்கு ஆராய்ச்சி நிலையம் எதற்கு, நர்சரி போதுமே என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


தோட்டக்கலைத்துறையோ, தொழில்நுட்ப ஆலோசனைகளை, ஆராய்ச்சி நிலையம் தான் வழங்க வேண்டும் என்ற நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement