Advertisement

சாக்கடை பாலம் சீரமைக்க நடவடிக்கை தேவை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மெயின் ரோடு - நாடார் தெரு சந்திப்பில் சேதம் அடைந்துள்ள சாக்கடை பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆண்டிபட்டி பேரூராட்சி நாடார் தெரு நுழைவுப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பகுதி ரோடு புதுப்பிக்கப்பட்டபோது வடிகால் சீரமைக்க வில்லை. சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் வெளியேறி செல்கிறது. பல மாதத்திற்கு முன் சாக்கடை அடைப்பை சரிசெய்தபோது உடைந்து சேதமானது. இன்னும் சரிசெய்யப்படவில்லை. குறுகலான ரோட்டின் ஓரத்தில் உடைந்த சாக்கடை அருகே வாகனங்கள் திரும்பும்போது பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் புதிய சாக்கடை பாலம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-----------
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement