Advertisement

காட்சி பொருளான சிசிடிவி., கேமரா

கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டியில் போலீசாரால் வைக்கப்பட்ட சிசிடிவி., கேமரா பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.


கருநாக்கமுத்தன்பட்டி கிராமம், கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கிராமத்தில் குற்றச்செயல் அதிகமாக நடப்பதாக, கடந்த ஆண்டு அவுட் போலீஸ் ஸ்டேஷன்' கட்டி, தேனி எஸ்.பி., திறந்து வைத்தார். ஒரு மாதம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த இந்த ஸ்டேஷன் மூடுவிழா காணப்பட்டது.மேலும், முக்கிய சந்திப்புகளில் சி.சி.டிவி., கேமரா போலீசாரால் வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் செயல்பாடின்றி தற்போது காட்சி பொருளாகவே உள்ளது.


இங்குள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷனையும், செயல்படாமல் உள்ள சிசிடிவி., கேமராவை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி நடவடிக்கை எடுப்பாரா என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement