Advertisement

உ.பி.,யில் இருந்து ம.பி.,க்கு நடந்து வந்த கான்ஸ்டபிள்

போபால் : ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் இருந்து, மத்திய பிரதேசத்திற்கு நடை பயணமாக வந்து, பணிக்கு திரும்பிய போலீஸ் கான்ஸ்டபிளுக்கு, பாராட்டுகள் குவிகின்றன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர், டாக்டர்கள் உள்ளிட்ட பொது சேவைகளில் ஈடுபடுவோருக்கு மட்டுமே, வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில், போக்குவரத்து சேவைகள் இல்லாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.இங்குள்ள ராஜ்கர் மாவட்ட காவல் நிலையத்தில், கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் திக்விஜய் சர்மா, 22, தன் இளநிலை பட்டப் படிப்பு தேர்வை எழுத, உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்றிருந்தார். எனினும், அந்த தேர்வுகள், ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, தன் பணிக்கு திரும்ப எண்ணிய திக்விஜய், போக்குவரத்து வசதி இல்லாததால், ம.பி.,யின் ராஜ்கருக்கு நடை பயணமாக வந்துஉள்ளார். சில இடங்களில், சாலையில் சென்றவர்களின் பைக்கில் ஏறிக்கொண்டும், இதர இடங்களில் நடந்தபடியும், 450 கி.மீ., துாரத்தை கடந்து, இங்கு வந்து சேர்ந்தார். இவரின் அந்த, 20 மணிநேர பயணம், காவல்துறை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திக்விஜயின் கால்கள், வீக்கமடைந்து காணப்பட்டதால், சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு, இன்ஸ்பெக்டர் அவரை அறிவுறுத்தினார். தன் பணி மீது திக்விஜய் வைத்திருந்த அர்ப்பணிப்பு உணர்வுக்கு, காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, அவரை பாராட்டியுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    கடமையே கண்ணாயினார்

  • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

    வேலை confirm ஆகியிருக்காது. வேலை உறுதி ஆனபின் பாருங்கள்

  • Pannadai Pandian - wuxi,சீனா

    கடமை வீரன் கட்டத்துறை.....சிலருக்கு பணியில் தொடரவில்லை என்றால் நெஞ்சில் குற்ற உணரவு இருக்கும். வேலையை தொடர்ந்த பின்பே ஒய்வு.. சாப்பாடு, இளைப்பாறுவது என்று...வாழ்க இந்த இளந்தலைமுறை பணியாளர்.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    ஆபத்துக் காலம் சாதாரணனையும் உத்வேகம் கொடுத்து சாதனையாளன் ஆக்குகிறது. சபாஷ்

  • ஆப்பு -

    அப்படியே கிருமி நாசினி தெளிச்சு விடுங்க. அங்கேருந்து தப்பிச்சு வந்திருக்கப் போறாரு.

Advertisement