Advertisement

இலவச காய்கறி விவசாயி தாராளம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், இயற்கை விவசாயி ஒருவர், ஏழை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று, காய்கறிகளை இலவசமாக வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் பகுதியைச் சேர்ந்தவர், இயற்கை விவசாயி மூர்த்தி, 48. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இங்குள்ள காந்தி நகர் பகுதி மக்கள், வீடுகளில் முடங்கியுள்ளனர்.இதையடுத்து, தன் தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய், புடலங்காய், வாழைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, பீர்க்கங்காய் போன்றவற்றை, காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளுக்கே சென்று, மூர்த்தி இலவசமாக வழங்கினார்.

மூர்த்தி கூறியதாவது:புதுக்கோட்டையில், 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். இதில், விளையும் காய்கறிகளை, நான் நடத்தும் ஓட்டலுக்கு பயன்படுத்தி வருகிறேன்.தற்போது, ஊரடங்கு உத்தரவால், ஏழை மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். எனவே, என் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை, தலா ஒன்றரை கிலோ வீதம், 250 ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    நல்லமனம் வாழ்க பலர் தாம் விளைத்தவைகளை கொண்டுபோயி கால்வாயில் கொட்டுறாங்க ப்ளீஸ் கொட்டாதீங்க அக்கம்பக்கத்துலே இருக்கும் மக்களுக்கு குறைச்சலாவிலைலேயே தரலாமே

  • Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா

    இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு,செல் விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருப்பான் இல் என இல்லறத்தில் இருப்பவர்கள்,வேளாண்மை செய்பவர்கள் எல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.ஆனால் பலர் மற்றவர்களை சுரண்டி வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதால் இயற்கை சீற்றம் அதிகமாகிறது.சிலர் மட்டும் பிறருக்கு உதவி செய்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளதால் இயற்கையின் சீற்றம் ஓரளவு தணிக்கிறது.

  • ஆப்பு -

    விக்காத பாலை சாக்கடையில் கொட்டுவதை விட இது எவ்வளவோ மேல். வாழ்க... வளர்க..

  • Senthil K -

    நன்றி அய்யா

Advertisement