Advertisement

துப்புரவாளருக்கு ரூபாய் மாலை

பாட்டியாலா: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, வீடுகளை விட்டு வெளியேறவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இந்த நிலையிலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துாய்மை பணியில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் குப்பை சேகரிக்க வந்த, துப்புரவு தொழிலாளிக்கு ரூபாய் மாலை அணிவித்து, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பாட்டியாலா மாவட்டத்தின், நபா நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பை சேகரிக்க சென்ற துப்புரவு தொழிலாளிக்கு மலர் துாவியும், கைகளை தட்டியும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். சிலர், ரூபாய் நோட்டு மாலை அணிவித்து தொழிலாளியை பாராட்டினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Indhuindian - Chennai,இந்தியா

    இது போல வூர் அடங்கு உத்தரவை மீறிபவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத்தை காவலர்களுக்கு பிரித்து கொடுப்பது நல்லது

Advertisement