Advertisement

பணம் போடுங்க; பிரட் எடுத்துக்குங்க! கோவையில் ஆளில்லாமல் விற்பனை

கோவை : 'பெட்டியில் பணம் போடுங்க; 'பிரட்' எடுத்துக்குங்க' என்கிற அறிவிப்போடு, கோவையில் ஒரு பேக்கரி ஒன்றில், ஆளில்லாமல் விற்பனை படுஜோராக நடக்கிறது.

கோவை, ரத்தினபுரியில் உள்ள பேக்கரி உரிமையாளர், தனது கடைக்கு முன், தினமும், 100 பிரட்டுகளை அடுக்கி வைக்கிறார். அருகில், சிறிய பெட்டி வைத்திருக்கிறார். ஒரு பிரட் விலை ரூ.30. 'பணத்தை பெட்டியில் போடுங்க; பிரட் எடுத்துக்குங்க' என்ற அறிவிப்பு பலகையை, தொங்க விட்டு, கிளம்பி விடுகிறார். ஆளில்லாமல் விற்பனையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

கோவை மக்கள் நேர்மையாக பணம் வைத்து விட்டு, பிரட் எடுத்துச் செல்கின்றனர். பிரட் காலியாகி விட்டதாக தகவல் வந்தால், மீண்டும், 100 பிரட்டுகளை அடுக்கி வைத்துச் செல்கிறார், அதன் உரிமையாளர் விக்னேஷ்.

அவரிடம் கேட்டபோது, ''இப்பகுதியில், ஐந்து ஆண்டுகளாக பேக்கரி நடத்துகிறேன். ரத்தினபுரி சுற்றுவட்டார மக்கள், பிரட் விரும்பி உட்கொள்வர். ஊரடங்கு சட்டம் அமல்படுத்தியதால், கடையை திறக்கவில்லை. பசியால் மக்கள் வாடக்கூடாது; பிரட் கிடைத்தால் ஓரளவு சமாளிப்பர் என்ற எண்ணத்தில், பிரட் அடுக்கி வைத்துச் சென்றேன். 99 சதவீத மக்கள், பணம் வைத்து, எடுத்துச் செல்கின்றனர். பணம் இல்லாதவர்கள் மற்றும் ஆதரவின்றி ரோட்டில் படுத்திருப்பவர்கள் இலவசமாக எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் பசி தீர்ந்தால் போதும்,'' என்றார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • எஸ்.சீனிவாசன் - DAS,ஐக்கிய அரபு நாடுகள்

    நல்ல உள்ளம் கொண்ட அன்பரே நீங்கள் வாழ்க...

  • Sathyanarayanan Sathyasekaren -

    Very good Initiative. appreciate.

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    அருமை, நன்றி இந்த மனிதாபிமான செயலுக்கு.

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    ஈஸ்வரோ ரக்ஷது..உங்கள் பணி நற்பணியாக வாழ்த்துக்கள்

  • ஆரூர் ரங் -

    பாராட்டுகள்.

Advertisement