Advertisement

நோயாளி,மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி மருந்து வழங்கும் போலீஸ்

தஞ்சாவூர் : கும்பகோணத்தில், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு தேவைப்படும் மருந்தின் விபரங்களை, போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பினால், போலீசார் அந்த மருந்துகளை வாங்கி, வீடுகளுக்கே சென்று கொடுத்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், மருந்து கடைகளுக்கு செல்வதை தவிர்க்கவும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கவும், மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் முறையை, போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன்படி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் மொபைல் போன் எண்-: 94899 52302 அல்லது 97917 22688, 63831 08227 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்களுக்கு, தேவையான மருந்துகள் பற்றிய விபரத்தை, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோயாளிகள் அனுப்பி வைக்கலாம்.



நோயாளிகள் குறிப்பிடும் மருந்து கடைகளில், மருந்துகளை வாங்கி, அவர்களின் வீடுகளுக்கே சென்று போலீசார் வழங்கி வருகின்றனர். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த, 12 பேர் குழுவினர், 24 மணி நேரமும் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து, கும்பகோணம் டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறியதாவது:மருந்து கடை ஊழியர்களிடம், மருந்து கேட்பவர்களை பேச வைத்தும், அவர்கள் கூறும் மருந்துகளை வாங்கி கொடுக்கிறோம்.இதற்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement