Advertisement

" சவால்களை எதிர்கொள்வோம்" - பிரிட்டன் ராணி

லண்டன்: கொரோனா என்னும் கொடிய வைரஸ் சவாலை அனைவரும் ஒன்றுபட்டு எதிர் கொண்டு வெற்றி பெறுவோம் என பிரிட்டன் அரசி எலிசபெத் நாட்டிற்கு ஆற்றிய உரையில் கூறவுள்ளார். இது தொடர்பாக லண்டன் செய்தி நிறுவனம் அவரது பேச்சை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இந்த உரை இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பிரிட்டனில் 41, ஆயிரத்து 913 பேர் பாதிக்கப்பட்டு 4,313 பேர் இறந்துள்ளனர். பிரிட்டன் இளவரசர் சார்லஸ்சுக்கு தொற்று பரவி அவர் குணமடைந்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தொடர் சிகிச்சையில் இருந் வருகிறார். இந்நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்து கொரோனாவை ஒழிப்போம் என பிரதமர் போரீஸ் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறினார்.

இன்று (ஏப்.5 ம் தேதி) பிரிட்டன் ராணி எலிசபெத் நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள உரையில் அவர் கூறியிருப்பதாவது:
தற்போது நாட்டிற்கு ஒரு துயரமான சவாலான நேரமிது என்பதை நான் அறிவேன். இந்த பெரும் சவாலுக்கும் நமது மக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை எல்லோரும் பெருமிதம் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில் முன்னனியில் நிற்கும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை நான் பாராட்டுகிறேன்.
மேலும் இந்த தலைமுறையின் பிரிட்டன் மக்கள் எதனையும் சமாளிக்கும் வலிமை உடையவர்கள் என்று நமது பின் சந்ததியினரும் கூறுவார்கள்" சுய ஒழுக்கம், நற்பண்புகள், அமைதியான நல்எண்ணம், சமூகத்தினரின் பண்புகள் மேலும் இந்த நாட்டை வலுப்படுத்துகின்றன." நம் நாட்டில் துயரமான தருணம். சிலருக்கு வருத்தம், பலருக்கு நிதி சிக்கல்கள், நம் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள், இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அனைவரும் ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Tamilnesan - Muscat,ஓமன்

  "சுய ஒழுக்கம், நற்பண்புகள்" இது எந்த வெளி நாட்டுக்காரனுக்கும் இருந்ததாக சரித்திரம் இல்லை. இல்லாத ஒன்றை சொல்கிறார்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  உலகில் நமக்கு தெரிந்து பரம்பரை ராணிகள் இரண்டு, ஒன்று அங்கு மற்றொன்று இங்கு, வந்தே மாதரம்

 • chander - qatar,கத்தார்

  சரி சரி கொஞ்சம் மக்கள் கூட்டத்தில் வாக்கிங் போயிட்டு வாங்க

 • blocked user - blocked,மயோட்

  ஆயுர்வேத மருந்து சாப்பிட்டாலும் கூட நாங்கள் அதை ஒத்துக்கொள்ள மாட்டோம்.

 • karthick - bangalore,இந்தியா

  உலகத்தில் அமைதியா வாழ்த்திட்டு இருந்த பல நூறு ஆசியநாட்டை கொள்ளை/வஞ்சகம் செய்தவர்கள் ஐரோப்பியர்கள்..கடவுள் நின்று கொல்வார் .அனுபவிகள் :) :) இந்தியாவில் இருந்து 200yrs (700 வருடம் முகமதியர்கள்) கொள்ளையடித்த கோவில் நகை, வைர, வைடூரியம், மரகதம் விலைமதிக்க முடியாது.. இப்பொழுதாவது திருந்தி ஏழை நாடான ஆப்பிரிக்கா ஆசிய, உதவி செய்து பாவம் போகும். உங்கள் சந்ததியை காபாத்துகோங்க.

Advertisement