Advertisement

வீடுகளில் முடங்கிய ஆண்களால் பெண்களுக்கு மனநல பாதிப்பா

சென்னை : 'ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்' என மாநில மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்யநாதன் கூறியதாவது: வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் ஆண்கள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு வகையில் இன்னல்களை ஏற்படுத்துகின்றனர். பொதுவாக நல்ல வேலையில் உள்ள ஆண்கள் அலுவலகத்தில் தான் சொன்னதும் ஓடி வந்து ஏவல் செய்யும் வேலையாட்களை போல தன் வீட்டில் உள்ள பெண்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அதேநேரம் வீட்டில் அடைந்து கிடக்கும் பெண்கள் தங்களின் தோழியரிடம் கூட பேச முடியாத நிலையில் உள்ளனர். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் இருப்பதால் அவர்களுக்கான உணவு தயாரிப்பது பாத்திரம் துலக்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும்செய்கின்றனர். தற்போது கணவர், மாமியார், சகோதரர், கொழுந்தன் உள்ளிட்டோரின் ஆதிக்கத்தால் அல்லாடுகின்றனர். பல இடங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை முடிவெடுக்கவும் தயங்காதவர்களாக இருப்பர். தற்போது எங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்த புகார்கள்வருகின்றன. எனவே பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் '181'ஐ தொடர்புகொண்டு பெண்கள் தங்களுக்கான பிரச்னைகள் குறித்து ஆலோசனை பெறலாம், என்றார். உதவி தேவைப்படும் பெண்கள் கண்ணகி பாக்ய நாதனை 63826 49042ல் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • K V RAO - PUDUVAI,இந்தியா

  ஆண்கள் எப்போதும் கொடியவர்கள். இது அனைவர்க்கும் தெரியும்

 • kumar c - bangalore,இந்தியா

  போலீஸ் அடி வாங்கிறவன் ஆசைபட்டா போறான் . நச்சரிப்பு தாங்காம கொரோனவோ போலீஸோ பரவாயில்லை தானே. அவனுகெல்லாம் தான்யா தியாகி பட்டம் கொடுக்கணும்

 • Pannadai Pandian - wuxi,சீனா

  வீட்டுக்காரன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு போடுறத நல்லா தின்னுபுட்டு டிவி பாத்து பொழுது போக்குற லேடீஸ் இந்த கடின காலத்தில் வீட்டில் கணவன் தங்கி இருக்கும் போது சேவை செய்ய வலிக்குது கணவனுக்கு வருந்துபவர்கள் யாரும் இல்லியா ???

  • Pannadai Pandian - wuxi,சீனா

   இந்த லேடீசை மனா உளைச்சலுக்கு ஆளாக்கி தன்னை தானே பிராண்டிக்கிறதா பாக்க ரொம்ப ஆசையா இருக்கு......என் கனவு பலிக்குமா ???

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  தவறான கருத்து இது. பெண்கள், கணவனுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டியதை பிரியத்துடனே செய்வார்கள் என்பது திண்ணம். இந்த சமயத்தில் கணவன்மார்களுக்கு, குழந்தைகளும் வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள்/செய்கிறார்கள். மிகைப்படுத்தப்பட்ட கற்பனை செய்தி.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மக்களின் மன வேதனைகளை புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு தான். நிலைமை மோசமாவதற்குள் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பல குடும்பங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது தான் உண்மை. லச்சக்கணக்கான மக்களுக்கு வேலையும் இல்லை கையில் பணமும் இல்லை. முழி பிதுங்குகிறது.

  • Baranitharan - Trichy,இந்தியா

   அய்யா, நீர் செவ்வாய் கிரகத்து மனிதரோ? இங்கு என்ன நடக்கிறது, என்ன பொறுப்பில்லாத பதிவு இது.

Advertisement