Advertisement

குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? ; ஸ்டாலின்

சென்னை : 'தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்; கொரோனாவிலும் அரசியல் தானா...' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது அறிக்கை:மஹாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில் தான் அதிகம்.கொரோனாவால், 234 பேர் பாதிக்கப்பட்ட, உ.பி., மாநிலத்திற்கு, 966 கோடி ரூபாய்; ஆனால், தமிழகத்திற்கு, 510 கோடி ரூபாய் தான், மத்திய அரசு நிவாரண நிதியாக ஒதுக்கி உள்ளது.பா.ஜ., ஆளாத மாநிலம் என்பது தான் காரணமா... மற்ற மாநிலத்திற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கினீர்கள் என்று கேட்கவில்லை. தமிழகத்திற்கு ஏன் குறைவாக, ஒதுக்குகிறீர்கள் என்று தான், கேட்க விரும்புகிறேன்.தமிழக அரசு முதலில், 9,000 கோடி ரூபாயும், பின், 3,200 கோடி ரூபாயும், மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசிடமிருந்து வந்திருப்பது, 510 கோடி ரூபாய் தான். இதிலிருந்து, மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மட்டும் தான் தெரிகிறது; கொரோனாவிலும் அரசியல் தான்.எம்.பி.,க்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கி, தொகுதி மக்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்யுங்கள் என, சொல்வதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி.,க்களை, நெருக்கடியில் நிறுத்துவதாக உள்ளது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • natarajan s - chennai,இந்தியா

    இது ஒவொரு மாநில SDRF (மாநில பேரிடர் நிவாரண நிதி ) நிதியில் இருந்த மீதி தொகையை அந்த அந்த மாநிலமே கொரோனாவுக்கு செலவு செய்ய அனுமதியளித்து விடுவிக்க பட்ட பணம். இதுபோக ஒவ்வொரு மாநிலத்திற்கும் 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது . மாநில அரசு கேட்கும் நிதியை அப்படியே கொடுக்க முடியாது நிறைய working காட்ட வேண்டும். பிற மாநிலங்களை விட இங்கு கொரோன தாக்கம் குறைவுதான் நல்ல முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இதை தடுக்க முடிந்துள்ளது . எல்லாவற்றையும் குறை சொல்வது சரியல்ல .

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இந்த நிதிகள் மக்களுக்காக. இந்த அரசு இருக்கும் நிதியை செவ்வனே நிர்வகிக்கும். கமிசன் எல்லாம் அடிக்கமாட்டார்கள். அதையெல்லாம் கணக்கில் சேர்க்காதீர்கள். நீங்கள் பதவியில் இருந்தால் நிலைமையே வேறு எல்லாம் குடும்ப மக்களுக்கும்.

Advertisement