Advertisement

காய்கறிகள், பழங்கள் ஆன்லைனில் முன்பதிவு

சென்னை : 'ஆன்லைன்' வழியாக, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையை, தோட்டக்கலை துறையினர் துவக்கியுள்ளனர்.

தோட்டக்கலை துறை பண்ணைகள், பூங்காக்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில், காய்கறிகள், கீரைகள், பழங்கள், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இணையதள சேவைதற்போது, சென்னையில், 'ஆன்லைன்' வழியாக, இவற்றை விற்பனை செய்யும் பணியை, தோட்டக்கலை துறையினர் துவக்கி உள்ளனர். இதற்காக, ethottam.com என்ற, இணையதள சேவை துவக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த படியே, தங்களுக்கு தேவையான காய்கறிகளை, ஆன்லைனில் முன்பதிவு செய்து, இனி, சென்னை வாசிகள் பெற முடியும்.

காய்கறி, பழங்களுக்கு குறைந்தபட்ச விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோதனைதக்காளி, 15 ரூபாய்; பெரிய வெங்காயம், 20; உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், கத்தரிக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள், கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. கீரைக்கட்டு, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ ஆப்பிள், 115 ரூபாய்; வாழைப்பழம், 30; தர்பூசணி, 10; கிர்ணி, 40; திராட்சை, 90 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பொருட்களின் விலையை ஏற்றவும், இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


வேளாண் துறை செயலர், ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலை துறை இயக்குனர், சுப்பையன் உத்தரவின்படி, சோதனை முறையில், சென்னையில், நேற்று முதல் விற்பனை துவங்கியுள்ளது. திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களுக்கும், இத்திட்டத்தை விரைவுப்படுத்த இருப்பதாக, தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement