Advertisement

கள்ளச்சாராயம் தயாரிப்பு குமரி அருகே மூவர் கைது

நாகர்கோவில் : ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது பிரியர்கள் சாராயம், கள் தேடி அலைகின்றனர்.



சில இடங்களில், பனைகளில் இருந்து கள் இறக்கப்பட்டு, விற்கப்படுகிறது.தற்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது. குமரி மாவட்டம், குளச்சல் பகுதியான பெத்தேல்புரத்தில், ஒரு தோட்டத்தில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.அங்கு காய்ச்சப்பட்ட, 20 லிட்டர் சாராயம், பலா உள்ளிட்ட பழங்கள் போட்டு வைக்கப்பட்ட, 80 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement