Advertisement

உற்பத்தி சரிவால் உயர்கிறது முட்டை விலை

நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 400 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில், முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.இதில், 380 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 400 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. உற்பத்தி குறைந்துள்ள சூழலில், நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், முட்டை கொள்முதல் விலை, நான்கு நாட்களில், 50 காசுகள் உயர்ந்துள்ளது.பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கிலோ, 47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையில், 15 ரூபாய் உயர்த்தி, 62 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement