Advertisement

இந்திய - சீன எல்லை பிரச்னை: 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை

Share
புதுடில்லி: இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய - சீன எல்லை பகுதியில் காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள், கடந்த, 5ம் தேதி அத்துமீறி நுழைந்த சீன வீரர்களால் இரு தரப்புக்கும் கை கலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், இந்திய - சீன எல்லை பகுதி யில் இதுபோன்ற ஒரு நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் இந்த பிரச்ணைக்கு தீ்ர்வாக இரு தரப்பிலும் வரும் 6 -ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்திய சீன இடையேயான எல்லை பிரச்னை குறித்து ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை வரும் 6-ம் தேதி லடாக்கில் நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர்சிங் தலைமையில் 14 உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா

    பேச்சுவார்த்தையில் சீனா திபெத்தை விட்டு வெளியேற வேண்டும் . எல்லையில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை திபெத்திய அரசாங்கத்துடன் நாங்கள் பேசிக்கொள்கிறோம் என்று ஒரே போடாகப் போடா வேண்டும்.

  • Chandramoulli - Mumbai,இந்தியா

    Only action. No more discussion. This meeting is not going to give any fruitful results

  • RajanRajan - kerala,இந்தியா

    மத்திய அரசு விரைந்து பி ஓ கே வை கையகப்படுத்த வேண்டும் அப்போதான் சைனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

  • K.ANBARASAN - muscat,ஓமன்

    பேச்சுவார்த்தையின் போது இப்படி தான் பேச போகிறார்கள். சீனா - இந்தியா எல்லையில் நிற்க கூடாது ரோடு போடும் வேலை நடத்த கூடாது. அதுக்கு இந்தியா இப்படி பதில் கொடுக்கும் (கொடுக்கணும்) சீனா அதன் எல்லைக்கு திரும்ப போகணும். எங்கள் ரோடு போடும் வேலையை நிறுத்த முடியாது." எங்கள் ராணுவம் எங்கள் எல்லைக்குல் தான் நிற்கிறது ஆகையால் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை" என்று கேட்க வேண்டும்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    பேச்சுவார்த்தையின்போது, நமது அதிகாரிகள் ஒரு மறைமுக, வேண்டாம், நேர்முகமாக சீனாவை எச்சரிக்கவேண்டும். மீண்டும் வாலாட்டினால், வால் மட்டும் அல்ல, முழுஉடம்பும் வெட்டப்படும் என்று.

Advertisement