Advertisement

டாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி இணையதளம்

Share
மதுரை: கொரோனா ஊரடங்கில் சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் மத்திய அரசின் சுகாதார, குடும்பநல துறையின் www.esanjeevaniopd.in இணையதளம், செயலி வழி, ஆன்லைனில் வீட்டிற்கே வரும் டாக்டர்கள் இலவச ஆலோசனை வழங்கி மருந்து சீட்டும் தருகிறார்கள்.

கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல இணையம், செயலிகளை மக்களுக்காக வழங்கி வருகிறது. அதில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக 'ஆரோக்கிய சேது' இருக்கும் நிலையில் 2009ல் அரசால் துவங்கப்பட்ட 'இ-சஞ்சீவனி நேஷனல் டெலிகன்சல்டேஷன் சர்வீஸ்' இன்று மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன்
இணையதளம், ஆப் திறந்தவுடன் பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன், பேஷன்ட் லாகின், டாக்டர் லாகின் என பட்டன்கள் இருக்கும். புதிதாக பதிவு செய்வோர் பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன் பாக்ஸில் அலைபேசி எண் கொடுத்த பின் வரும் ஓ.டி.பி.,யை (ஒன் டைம் பாஸ்வேர்டு) பதிவு செய்ய வேண்டும். பெயர், முகவரி, மாநிலம், ஊர் போன்ற விபரங்களை கொடுத்த பின் வசிக்கும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். ஜெரனல் அவுட் பேஷன்ட் (ஒ.பி.டி) அல்லது ஸ்பெஷாலிட்டி ஓ.பி.டி.,யை கிளிக் செய்து ஏற்கனவே நம் டாக்டரிடம் பெற்ற 'ஹெல்த் ரிக்கார்டை' பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இ-பிரிஸ்கிரிப்ஷன் பெறலாம்ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த பின் டாக்டரை சந்திக்கும் ஐ.டி., 'டோக்கன் ஜெனரேட்' செய்ய வேண்டும். நோட்டிபிகேஷன் வந்ததும் லாகின் செய்து காத்திருக்க வேண்டும். டோக்கன் எண் வரிசை வரும் போது டாக்டர் வீடியோ மூலம் நம்முடன் இணைவார். அவரிடம் நம் உடல்நிலை உட்பட குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து ஆலோசனை பெறலாம். பின் மருந்து, மாத்திரைக்கான சீட்டை டாக்டர் ஜெனரேட் செய்வார். இ-பிரிஸ்கிரிப்ஷன் பிரிவில் சீட்டை பதிவிறக்கம் செய்து மருந்துக்கடையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு நலமாகலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  இன்று காலை என் தாயாரிடம் www.esanjeevaniopd.in விவரத்தை அளித்து ஆண்லைன் மூலம் பதிவு செய்த மூன்று நிமிடத்தில் மருத்துவர் Dr. BHARATH தயாளன் சேலம் SALEM, Tamil நாடு வீடியோ ஆடியோ மூலம் பத்து நிமிடம் ஆலோசனை நடத்தி மருந்து சீட்டு வழங்கி உள்ளார். தயவுசெய்து குற்றம் சொல்ல வேண்டாம். உலகில் எங்கும் இல்லாத இனைய சேவையில் இலவச மருத்துவம். ஜெய் மோடி சர்க்கார். ஜைஹிந்த்

 • Kothandaraman -

  மக்களை ஏமாற்றும் செயலில் அரசு முழுமையாக செயல்பட்டுள்ளது ஏமாற்றுவதற்கு இதுவும் ஒரு வழி

 • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவங்க கிட்டே OTP வாங்கி ரிஜிஸ்டர் பண்ண முடியுமான்னு பாருங்க. OTP சட்டு புட்டு வந்தா பக்கத்து தெரு பிள்ளையாருக்கு 108 சூரைத்தேங்கா போடறேன்னு நேர்ந்துக்கிட்டாலும் வராது. என்னோட அனுபவத்தில் கண்டது மட்டுமின்றி புகாரளித்ததும் உண்மை. வயது 60 க்கு மேலே ஆனாலும் ஒரு எட்டுத் பக்கத்திலுள்ள டாக்டரை பார்த்து மருத்துவ ஆலோசனை பெற்று மருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றிவிடும் என்பதே நிதர்சனம்.

 • நக்கல் -

  அருமை...

 • venkatan - Puducherry,இந்தியா

  மிக மிக பயனுள்ள தகவல்...

Advertisement