Advertisement

டவுட் தனபாலு

Share
மக்கள் நீதி மைய தலைவர், நடிகர் கமல்: கிராமங்களில் பரவி வரும் கொரோனா தொற்று கவலை அளிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லை. இதனால், கிராமத்தினர், நகரத்திற்கு பயணப்பட வேண்டி உள்ளது. நோய் வருமுன் தடுக்கும் வகையில், அரசு செயல்பட வேண்டும்; வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது.

'டவுட்' தனபாலு: கொரோனா தொடர்பாக, தொடர்ந்து கருத்து தெரிவிக்காதீர்கள். ஏனெனில், நீங்கள் நடித்த, தசாவதாரம் படத்தில், விஷ கிருமி பரவலை தடுக்க, 'சுனாமி' வந்தது போல காட்டி, 'பூ சுற்றிய' உங்களிடம், கொரோனாவை கொல்ல, ஏதாவது ஒரு புது உபாயம் கூறுங்கள் என, விசிலடிச்சான் குஞ்சுகள் கேட்டு விடுவரோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வருகிறது.

***

தமிழக பா.ஜ., தலைவர் முருகன்: பா.ஜ., எங்கிருக்கிறது என கேட்டனர். உள்ளாட்சி தேர்தலில், மாநிலம் முழுதும் வெற்றி பெற்று, அனைத்து உள்ளாட்சிகளிலும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளோம். அடுத்த, மேயில், சட்டசபை தேர்தல் வர உள்ளது. தேர்தலுக்கு தமிழக, பா.ஜ., தயாராக உள்ளது. அந்த தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும்.

'டவுட்' தனபாலு: 'அதீத நம்பிக்கையால், வீணாப்போன பல கட்சிகள், தமிழகத்தில் உள்ளன. அக்கட்சித் தலைவர்களை சந்தித்து, திருத்திக் கொள்வது நல்லது. மேலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'நோட்டா' பொத்தானை அகற்றி விடுங்கள். அதை ஒரு அளவுகோலாக வைத்து, உங்கள் கட்சிக்கு மக்கள் ஓட்டளித்து விடுகின்றனர்' என்று ஒலிக்கும் குரல், உங்களுக்கு கேட்கவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது!

***

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: பல்கலை, கல்லுாரி, பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்கள், வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பதால், அவர்களால் தேர்வு மையங்களுக்கு வர முடியாத சூழல் உள்ளது. எனவே, செப்டம்பர் மாதத்திற்குள், தேர்வுகளை நடத்த முடியாத சூழலில் உள்ளோம். இந்த விஷயத்தில் மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கலாம். அது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உதவிகரமாக இருக்கும்.

'டவுட்' தனபாலு: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விடுத்த கோரிக்கைக்கு, நீங்கள் இவ்வாறு பதில் அளித்து, கடிதம் எழுதியுள்ளீர்கள். இதே கோரிக்கையை, பிரதமர் மோடி விடுத்திருந்தால், 'முடியாது' என்ற ரீதியில், இ.பி.எஸ்., பதில் அளித்திருப்பாரா என்பது தான், கல்லுாரி மாணவர்களின், இப்போதைய, 'டவுட்!'lll
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Mano - Dammam,சவுதி அரேபியா

    என்னது கமல் சொல்வது எல்லாம் நல்லதா?.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அது என்னவோ, திரைத்துறையிலிருந்து கட்சி ஆரம்பித்ததாலேயே கமல் சொல்வது, எத்தனை நல்லதானாலும் அதை விமர்சிப்பது என்று ஒரு தீர்மானமே இருக்கும் போல

    • Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா

      ...........

    • IYER AMBI - mumbai,இந்தியா

      A PERSON LIKE MGR, JAI SHANKAR, CHO, MN NAMBIAR WHO HAD LIVED A CLEAN LIFE AND SHOWED CONCERN ON PUBLIC WILL BE ACCEPTED BY PUBLIC. NOT A PERSON WITHOUT ANY MORALITY. LET HIM SOLVE HIS OWN DOMESTIC PROBLEMS AND THEN COME TO PUBLIC.

Advertisement