திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்துக்கு, 'நிவர்' புயலால் பாதிப்பு இருக்காது என்றாலும், தாலுகா பேரிடர் மேலாண்மை குழு தேவையான உபகரணங்களுடன் தயார்நிலையில் இருக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல், 26 வரை, கடலோர மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புயல் கரையை கடக்கும்போது, உள்மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. புயல் குறித்து முன்னறிவிப்பு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, முன்னேற்பாட்டை துவக்கி விட்டது. தலைமை செயலர், புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, கலெக்டர்களுடன் நேற்று மதியம் ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து, மாவட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் அவசர ஆய்வு நடத்தினார்.
அதில், கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேசியதாவது:'நிவர்' புயலால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், புயல் பாதிப்பு இருக்காது; லேசான மழை வேண்டுமானால் பெய்யலாம்.பாதிப்பு இருக்காது என்றாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தயார் நிலையில் இருக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மீட்புப்பணிக்கான வீரர்கள் மற்றும் உபகரணங்களுடன், மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.புயல் அபாயம் இல்லை என்றாலும், தாலுகா வாரியாக, தடுப்பு நடவடிக்கை துவங்கியுள்ளது. மழை நீர்புகும் தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க வைக்க வேண்டும். மழை வெள்ளத்தால், உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
புயல் வெள்ளத்தால், பயிர் சேதம், கால்நடைகள் சேதமானால், உடனுக்குடன் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தேவையான உபகரணங்களுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள், தாலுகா அளவிலான பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!